கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தாண்டு ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பல கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான தொடரும் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் இத்தொடர் நடைபெற வேண்டும் என மின்னஞ்சல் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் ஜூலை மாதம் நடைபெறுவது சாத்தியமற்றது. தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து நாங்கள் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை.