விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. இந்த தொடர் இம்மாத இறுதி முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தியா - இலங்கை தொடர் ஒத்திவைப்பு! - இந்தியா - இலங்கை தொடர் ரத்து
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது கடினம் என பிசிசிஐ இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது.
அதன்படி இந்தத் தொடரை திட்டமிட்டபடி நடத்துவது கடினம் என்பதால் இதனை தள்ளிவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்த தொடரை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த இருநாட்டு வாரியங்களும் தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.