தென் ஆப்பரிக்கா அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் இந்திய அணியுடன் மோதவுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் நோக்கில் இரு அணிகளும் பலபரீட்சை செய்கின்றன.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு முன்னணி வீரர்களான தோனி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த டி20 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் உலகக்கோப்பையில் சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதியன்று நடக்கப்போகும் முதல் டி20 போட்டிக்கு இவ்விரு அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தர்மசாலாவில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இன்றைய வலைப்பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஆட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே வலுத்துள்ளது.