வருகிற ஜனவரி மாதம் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடத் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரை அடுத்த சீசனுக்கு ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் நிக் ஹாக்லி, "ஜனவரி மாதம் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரை நடத்துவதற்கு நாங்கள் ஆவலுடன் இருந்தோம்.
ஆனால் தற்போது கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவருவதால், இத்தொடரை அடுத்த சீசனுக்கு ஒத்திவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தியா பங்கேற்ற கடைசி சர்வதேச போட்டியும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விளையாட்டு 2020: ஹாக்கி நிகழ்வுகள் ஓர் பார்வை!