இந்தியாவுக்கு விளையாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது.இதில், அனைத்து டி20 போட்டிகளும் சூரத்தில் நடைபெறுகிறது.
அந்தவகையில், சூரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் மழை பெய்ததால் ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன்பின் இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
ஸ்மிருதி மந்தான 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின் ஷஃபாலியுடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியின் ரன் கணக்கை உயர்த்தும் பணியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடி ஷஃபாலி 46 ரன்களையும், ரோட்ரிக்ஸ் 33 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.