தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2019, 8:53 PM IST

ETV Bharat / sports

‘இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் பும்ரா’ - இர்பான் பதான்

பும்ராவை போல் ஒரு வீரர் கிடைக்க இந்திய அணி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Bumrah

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் வரிசையில் இணைந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானத் தொடரில் பும்ரா 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அந்தத் தொடரை வென்றது.

பும்ரா

இந்நிலையில், பும்ரா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், “இந்திய அணியில் பும்ரா மிகவும் முக்கியம் வாயந்த வீரர். அவர் அணியில் இடம்பெறவில்லை என்றால் அது இந்திய அணிக்குதான் பெரிய இழப்பு. பும்ராவை போல் ஒரு கிரிக்கெட் வீரர் கிடைக்க இந்திய அணி பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளராக மூன்று விதமான போட்டிகளிலும் தலைசிறந்து விளங்க, அவருக்கு வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அவர் எடுத்தது ஒன்றும் கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" என்றார்.

ஒரு சில வீரர்கள் தங்களது வாழ்க்கையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருக்க மாட்டார்கள். அப்படி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினால் அது அரிய வகை சாதனைப் படைத்ததற்கு சமமாகும். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஏனெனில், ஹாட்ரிக் என்பது கிரிக்கெட்டில் எப்போதாவாதுதான் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இர்பான் பதான்

இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள், 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் இதுவரை 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2006 பாகிஸ்தானுக்கு எதிராக காராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே இவர் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details