2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கான ஒப்பந்தத்தை சீனாவின் செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ அளித்துவருகிறது. இதற்கான உரிமத்தை 2017ஆம் ஆண்டில் ஐந்தாண்டு அடிப்படையில் ரூ.1,079 கோடிக்கு ஓப்போ நிறுவனம் பெற்றது.
ஆனால் தற்போது அந்த நிறுவனம் தனது ஒப்பந்தத்தை பெங்களூருவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜு'ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த ஒப்பந்தமானது இனிவரும் தொடர்களில் அதாவது 2022ஆம் ஆண்டு வரையிலான இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் வீரர்கள் பைஜு'ஸ் நிறுவனத்தின் சீருடை அணிந்து விளையாடுவர்.
புதிய சீருடையில் இந்திய அணியின் கேப்டன், துணைக் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இந்த ஒப்பந்தமானது கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது. அதனைத்தொடர்ந்து தற்போது நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியுடனான பைஜு'ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.
அதன்படி இன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி பைஜு'ஸ் நிறுவனத்தின் சீருடையில் களமிறங்குகிறது. புதிய சீருடையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்திய அணி பயிற்சியின்போது தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.