இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில், பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று (பிப்.20) அறிவித்தது.
விராட் கோலி தலைமையிலான அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார், அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேத்தியா, இஷான் கிஷான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.