தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பட்டாசு வெடிக்காதீங்க - விராட் கோலி அறிவுரை - Virat Kholi latest news

நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கூறி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ட்விட்டரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி

By

Published : Nov 14, 2020, 2:11 PM IST

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரமதர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதில், " இந்த தீபாவளி மகிழ்ச்சிகரமாக இருக்க உங்களுக்குக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துகள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இம்முறை பட்டாசு வெடிக்காதீர்கள். வீட்டிலே உங்களது அன்புக்குரியவர்களுடன் இனிப்புகளுடன் கூடிய எளிய தீபாவளியைக் கொண்டாடுங்கள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:

தீபாவளி தினத்தில் மோசமான காற்று மாசை கொண்ட டெல்லி!

ABOUT THE AUTHOR

...view details