இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கும் கடந்த போட்டியை போலவே 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது ரசிகர்களிடையே இருந்த ஒரு இளைஞர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு மோதிரம் கொடுத்து இந்திய இளைஞர் ஒருவர் காதலை தெரிவித்தார். அதனை எதிர்பார்க்காத ஆஸ்திரேலியா பெண், அந்த இந்திய இளைஞருக்கு உடனடியாக ஓகே கூறினார்.