சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் ட்ரெண்ட் என்ற வார்த்தை பிரபலமான ஒன்று. வாரத்திற்கு ஒரு விஷயத்தை ட்ரெண்ட் செய்வது என்று வழக்கமாக வைத்துள்ளனர் நெட்டிசன்கள். புகைப்படம், பல வகையான சேலஞ்ச் உள்ளிட்ட பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்திய கிரிக்கெட்டர்களுக்கு வயதானால் எப்படி இருப்பார்கள்? - வைரல் புகைப்படம்
இந்திய கிரிக்கெட்டர்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

indian cricketers
சமீபத்தில் 'பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற ஒன்று ட்ரெண்டானது. அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டர்கள் சிலருடைய புகைப்படத்தை வயதான தோற்றத்தில் மாற்றி நெட்டிசன்கள் வெளியிட்டனர். அப்புகைப்படம் சிறிது நேரத்திலேயே ட்ரெண்ட் ஆகின. அந்த வகையில் தினேஷ் கார்த்திக், தோனி, ரோகித் ஷர்மா, கோலி, சாகல், புவனேஷ்வர் குமார், ஜடேஜா ஆகியோரது வயதான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.