சீன மொபைல் தயாரிப்பாளரான ஓப்போ நிறுவனத்தின் ஜெர்சிக்கு பதிலாக பெங்களூருவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் டுடோரியல் நிறுவனமான பைஜு'ஸ் நிறுவனத்தின் இலச்சினையுடன் கூடிய புதிய ஜெர்சியில், செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணி விளையாடவுள்ளது.
மீண்டும் மாறுகிறது இந்திய அணியின் ஜெர்சி... ! - indian team]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணி பைஜு'ஸ் இலச்சினையுடன் கூடிய புதிய ஜெர்சியில் விளையாடவுள்ளது.
இது குறித்து பிசிசிஐ மூத்த அலுவலர் கூறுகையில், மார்ச் 2017இல் இந்திய அணியின் ஒப்பந்த உரிமையை ஓப்போ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு பெற்றது. இதன்மூலம் மார்ச் 2022ஆம் ஆண்டுவரை ரூ .1079 கோடிக்கு ஓப்போ நிறுவனம் வாங்கியது.
ஆனால், இது ஓப்போ, பைஜு'ஸ், பிசிசிஐ ஆகியோரிடையேயான மும்முனை ஒப்பந்தமாகும். இதன் அடிப்படையில் ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து பைஜு'ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. இந்நிலையில் ஓப்போ, பைஜு'ஸ், பிசிசிஐ இடையிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.