இங்கிலாந்தில் வெளியாகும் 'விஸ்டன்' புத்தகத்தில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கான விஸ்டன் விருது பெறுபவர்களின் பெயர் இடம்பெறும். அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் ஏழாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2019- 2020 ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பும்ரா, ஸ்மிருதி மந்தனாவிற்கு கிடைத்த புதிய விருது - Bumrah, smiriti mandana wisden award
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீட் பும்ரா, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானாவிற்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விஸ்டன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இந்தாண்டுக்கான விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான், இலங்கை அணியின் திமுத் கருணாரத்னே, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளிட்ட மூன்று பேரும் ஆசியக் கண்டத்தில் இருந்து இந்த விருதை பெறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மித்தாலி ராஜ், தீப்தி சர்மாவிற்கு அடுத்தபடியாக ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விஸ்டன் புத்தகத்தில் சிறந்த ஆட்டத்திறமையால் இந்திய அணியில் இடம்பிடித்த மயாங்க் அகர்வாலின் பெயரும் இடம்பிடித்துள்ளது.