நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில், ஆஸ்திரேலிய தொடரில் விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுல் இந்தப் போட்டியிலும் விக்கெட் கீப்பராக தொடரவுள்ளார். இதனால் அணியிலிருந்து பந்த் சேர்க்கப்படவில்லை. சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹலும் இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.