இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் இந்திய அணியை வங்கதேசம் முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துதது. இந்த போட்டியை பொறுத்த வரையில் இரு அணியிலும் மாற்றங்கள் ஏதுமில்லை.
இந்திய வீரர்கள் விரவம்: ரோஹித் சர்மா (கே), ரிஷாப் பந்த், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், கிருனால் பாண்டியா, தீபக் சாஹர், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே.
வங்கதேச வீரர்கள் விரவம்: மஹ்முதுல்லா (கே), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நைம், அஃபிஃப் ஹொசைன், அமினுல் இஸ்லாம், மொசாடெக் ஹொசைன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அமின் ஹோசைன்.