தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி! - final

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

indian cricket team

By

Published : Aug 14, 2019, 5:33 PM IST

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது இந்திய அணி.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்தியா 180 ரன்களை இலக்காக இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. இந்திய வீரர் ரவிந்திர சான்டே 34 பந்துகளில் 53 ரன்களை அடித்தார்.

அதன் பின் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 144 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details