இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - தவான் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட இலங்கை பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திணறினர்.
முதல் விக்கெட்டுக்கு 9 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து தவான் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி இணை அதிரடியாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு அருகில் சென்றது. பின்னர் 17ஆவது ஓவரின்போது ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி ஆட்டத்தை சிக்சர் அடித்து முடித்துவைத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி 143 ரன்கள் என்ற இலக்கினை இந்திய அணி 17.3 ஓவர்களிலே எட்டியது. இறுதிவரை ஆடிய விராட் கோலி 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டி20 போட்டி ஜனவரி 10ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: மே 24இல் ஐபிஎல் பைனல்