வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஸ்டீஃபானி டெய்லர், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 225 ரன்களை சேர்த்தது. அதில் கேப்டன் டெய்லர் அதிரடியாக 91 பந்துகளில் 94 ரன்களும், நடாஷா 51 ரன்களும், நேஷன் 43 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள், ப்ரியா புனியா - ரோட்ரிக்ஸ் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், ரோட்ரிக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பூனம் ராவத் களமிறங்கினார்.
இந்திய தொடக்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் இதனிடையே ப்ரியா புனியா தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் ஸ்கோர் 124 ரன்களாக இருக்கையில், பூனம் ராவத் 75 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த கேப்டன் மிதாலி ராஜ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, நடுவரிசையில் நிலைத்து நின்று ஆடாமல் இந்திய அணியினர் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
2ஆவது அரைசதம் விளாசிய ப்ரியா புனியா இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் 217 ரன்களை எடுத்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராவிதமாக பூனம் யாதவ் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்திய 50 ஓவர்களில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.
இதையும் படிங்க: சிங்கம் இஸ் பேக்... அர்ஜென்டினா அணிக்கு திரும்பும் மெஸ்ஸி