இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் முன்னேறின.
இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதவிருந்தது. இந்த ஆட்டம் இன்று நடக்கவிருந்த நிலையில் கனமழை காரணமாக டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
கனமழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
தொடர்ந்து ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடும் போட்டியும் ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மழையால் ரத்தான கடைசி லீக் போட்டி... முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா!