இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இந்தியாவுடன் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரிலும் இரண்டாவது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
இதனிடையே இன்று பிசிசிஐ புதியத் தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறும் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என்று பரிசீலித்திருந்தது. இதனனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்காமல் இருந்ததால் இதில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று வங்கதேச கிரிக்கெட் வாரியம்(பிசிபி) பிசிசிஐயின் பரிந்துரையை ஏற்றதையடுத்து இந்த புதிய முடிவு வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் ஒரு சிறந்த முன்னேற்றம் என்று கூறிய கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற மாற்றங்கள் தேவை என்றும், பகல் இரவு போட்டிகள் நடத்த ஒப்புக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி என்றும் தெரிவத்தார்.