கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடர் வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் பார்வையாளர்களின்றி நடைபெற உள்ளது. இந்தியாவிலும் லா லிகா கால்பந்து தொடருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் - லா லிகா எம்.டி - லா லிகா கால்பந்து தொடரின் நிர்வாக இயக்குனர்
இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற தொடங்கினால் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என லா லிகா தொடரின் இந்தியா நிர்வாக இயக்குநர் ஜோஸே அன்டானியோ தெரிவித்துள்ளார்.

India will only get back to normal once cricket resumes: LaLiga India chief
இந்நிலையில் இந்தியாவிலும் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பும் என லா லிகா தொடரின் இந்திய நிர்வாக இயக்குநர் ஜோஸே அன்டானியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கினால் மட்டுமே நாடு இயல்பு நிலைக்கு வரும். விரைவில் இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை காண விரும்புகிறேன். அதுவும் டெல்லியில் உள்ள எனது குடியிருப்பிலிருந்து இதை பார்க்க விரும்புகிறேன்” என்றார்.