தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை (டிச. 08) தொடங்குகிறது.

india
india

By

Published : Dec 7, 2019, 10:15 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நேற்று (டிச.06) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் விராட் கோலியின் விஸ்வரூப ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அணி வெற்றிபெற்றது. இரண்டாவது டி20 போட்டி நாளையும் மூன்றாவது டி20 போட்டி வருகின்ற 11ஆம் தேதியும் நடைபெறும்.

டி20 போட்டிகளைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகள் தொடங்குகின்றன. முதலாவது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. வருகிற 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பகல் - இரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருப்பதால் இந்தப் போட்டியை நேரில் காண சென்னை ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

டிக்கெட்டுகள் விலை நிலவரம்

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலக கவுன்ட்டர்களில் நாளை (டிச.08) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,200 ஆகும். குளிர்சாதன வசதி கொண்ட பாக்ஸ் பெட்டிகளின் டிக்கெட் விலை ரூ.12 ஆயிரம் ஆகும்.

டிக்கெட் விலைகள் முறையே ரூ.2400, ரூ.4000, ரூ.4800, ரூ.6500, ரூ.8000 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com, www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்-லைன் மூலம் பெறலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நேபாளத்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி!

ABOUT THE AUTHOR

...view details