இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியானது ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட நவ்தீப் சைனி இந்திய அணி சார்பாக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகிறார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் மாற்றமின்றி களமிறங்குகிறது.