தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எல்லாம் அணியின் நன்மைக்கே - அஸ்வின் தேர்வு செய்யப்படாதது குறித்து ரஹானே

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து அதிருப்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். தற்போது அது தொடர்பாக இந்திய பேட்ஸ்மேன் ரஹானே விளக்கம் அளித்துள்ளார்.

Ajinkya Rahane

By

Published : Aug 23, 2019, 8:10 PM IST

நார்த் சவுண்ட்: அஸ்வின், ரோஹித் போன்ற சிறந்த வீரர்கள் பெஞ்சில் அமர வைத்திருப்பது கடினமான முடிவுதான். இருப்பினும் அணியின் நன்மைக்குத்தான் என்று இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ரஹானே தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் தொடர்களுக்கு பின் டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு சதங்களுடன் 552 ரன்கள், 60 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினை அணியில் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், முன்னணி வீரர்களான அஸ்வின், ரோஹித் ஷர்மா அணியில் சேர்க்கப்படாதது குறித்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவுக்கு பின்னர் பேசிய பேட்ஸ்மேன் ரஹானே, ”சிறப்பாக விளையாடி வரும் இரு வீரர்களை மிஸ் செய்திருப்பது கடினமான விஷயம்தான். ஆனால் அணி நிர்வாகம் அணிக்கான சிறந்த காம்பினேஷனை கருத்தில்கொண்டு வீரர்களை தேர்வுசெய்துள்ளது.

குறிபிட்ட இந்த ஆடுகளத்துக்கு ஜடேஜா பொருத்தமாக இருப்பார். பவுலிங்கிலும் 6வது பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக பங்களிப்பார் எனவும் கருத்தில் கொள்ளப்பட்டது. விஹாரியும் சிறப்பாக பவுலிங் செய்வார் என நம்பப்பட்டது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இதனை விவாதித்து முடிவு செய்தனர்.

அஸ்வின் மற்றும் ரோஹித் போன்ற சிறந்த வீரர்களை பெஞ்சில் அமர வைத்திருப்பது கடினமான முடிவுதான் என்றாலும் அணியின் நன்மைக்காகவே அவர்கள் சேர்க்கப்படவில்லை” என்றார்.

Ravichandran Ashwin

முன்னதாக, நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் அபார பந்து வீச்சுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், ரஹானே மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அவர், 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details