கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி, மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுவருகின்றன.
இதனிடையே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேறிருந்தது. நேற்று நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. பின்னர் அடுத்தப் போட்டிக்காக இந்திய அணி லக்னோ மைதானம் வந்தது.