தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாம் இன்னிங்ஸிலும் திணறும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்! - latest sports news

புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியா

By

Published : Oct 13, 2019, 2:57 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபோலோ ஆன் வழங்கியது.

அதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான மார்க்ரம் வழக்கம்போல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, தொடர்ந்து வந்து டி ப்ரூயின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் டூ ப்ளஸிஸ் - எல்கர் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை சிறிது நேரம் தாக்குப்பிடிக்க, மார்க்ரம் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இந்திய அணி

அதையடுத்து பந்துவீசுவதற்கு அஸ்வின் வரவழைக்கப்பட்டார். அதற்கு பலனாக கேப்டன் டூ ப்ளஸிஸ் 5 ரன்களிலும், எல்கர் 48 ரன்களிலும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணியின் நிலைமை பரிதாபமாகியது. அதையடுத்து பவுமா - டி காக் இணை களமிறங்கி ரன்கள் சேர்க்க, உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்க 252 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்னும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இன்றே இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: #CPL2019: இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது பார்படாஸ்!

ABOUT THE AUTHOR

...view details