நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்தது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது வெற்றியைப் பதிவுசெய்து சாதனைப் படைத்தது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளைப் பெற்ற ஏழாவது அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள்
நூறு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணிகள்
அணி | போட்டிகள் | ஆண்டு |
இங்கிலாந்து | 241 | 1939 |
ஆஸ்திரேலியா | 199 | 1951 |
வெஸ்ட் இண்டீஸ் | 266 | 1988 |
தென் ஆப்பிரிக்கா | 310 | 2006 |
பாகிஸ்தான் | 320 | 2006 |
இந்தியா | 432 | 2009 |
நியூசிலாந்து | 441 | 2020 |
இந்தியா - நியூசிலாந்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (இதுவரை)
ஆண்டு | மைதானம் |
1989/90 | கிறிஸ்ட்சர்ச் |
2002/03 | விலிங்டன் |
2019/20 | விலிங்டன் |