தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!

அடுத்தாண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

India Vs England series schedule
India Vs England series schedule

By

Published : Dec 10, 2020, 5:10 PM IST

2021ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், இத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.

ஆனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அத்தொடருக்கான தேதி மற்றும் மைதானம் குறித்த அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:

இந்தியா vs இங்கிலாந்து தேதி மைதானம்
முதலாவது டெஸ்ட் பிப்.05 - பிப்.09 சென்னை
இரண்டாவது டெஸ்ட் பிப்.13 - பிப்.17 சென்னை

மூன்றாவது டெஸ்ட்

(பகலிரவு)

பிப். 24 - பிப். 28 அகமதாபாத் நான்காவது டெஸ்ட் மார்ச் 04 - மார்.08 அகமதாபாத்

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்:

இந்தியா vs இங்கிலாந்து தேதி மைதானம்
முதலாவது டி20 மார்ச் 12 அகமதாபாத்
இரண்டாவது டி20 மார்ச் 14 அகமதாபாத்
மூன்றாவது டி20 மார்ச் 16 அகமதாபாத்
நான்காவது டி20 மார்ச் 18 அகமதாபாத்
ஐந்தாவது டி20 மார்ச் 29 அகமதாபாத்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்:

இந்தியா vs இங்கிலாந்து தேதி மைதானம்
முதலாவது ஒருநாள் மார்ச் 23 புனே
இரண்டாவது ஒருநாள் மார்ச் 26 புனே
மூன்றாவது ஒருநாள் மார்ச் 28 புனே

இதையும் படிங்க: ஐசிசி டி20 தரவரிசை: டாப் 3-யில் இடம்பிடித்த ராகுல்!

ABOUT THE AUTHOR

...view details