தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா அச்சுறுத்தல்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மீதமுள்ள மூன்று டி20 போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gujarat Cricket Association (GCA) decides to conduct remaining 3 T-20 matches without spectators inside the NaMo stadium.
Gujarat Cricket Association (GCA) decides to conduct remaining 3 T-20 matches without spectators inside the NaMo stadium.

By

Published : Mar 15, 2021, 10:56 PM IST

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும், இத்தொடரைக் காண 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குஜராத் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

அதன்பின் இத்தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய அலுவலர் ஒருவர், ”கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள், வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அகமதாபாத்தில் நடைபெறும் மீதமுள்ள போட்டிகளுக்கு பார்வையாளர்களின் அனுமதியை மறுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'அறிமுக ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவது எளிதல்ல' - இஷான் கிஷானை புகழும் வி.வி.எஸ். லக்ஷ்மன்!

ABOUT THE AUTHOR

...view details