சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.13) இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
முன்னதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
அதேபோல் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வும், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில், கரோனா கட்டுப்பாடு விதியின்படி 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓராண்டிற்கு பிறகு சொந்த நாட்டில் பார்வையாளர்களுக்கு மத்தியில் விளையாடும் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த் , அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து அணி:ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியா ஓபன் - நான்காவது சுற்றுக்கு செரீனா தகுதி