யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதன் சூப்பர் லீக் சுற்றின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடும் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசிர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டி மீது பெரும் கவனம் விழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய அதே அணியே களமிறங்கியுள்ளது.
பாகிஸ்தான் அணியிலும் கடந்த போட்டியில் ஆடியே அதே அணியே களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.