19 வயதுக்குட்பட்ட இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 48.3 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக, லூக் பெஃபோர்ட் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மூன்று விக்கெட்டுகளையும் கார்த்திக் தியாகி, ஷுபங் ஹெக்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.