தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

360 டிகிரியிலும் இந்தியாதான் டாப்! - இந்தியாவின் டெஸ்ட் சாதனைகள்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

India

By

Published : Nov 25, 2019, 11:00 AM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகமானப் பின், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியது. அந்த வகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்தூரில் நடைபெற்ற இதன் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த இன்னிங்ஸ் வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றிகளை பதிவு செய்த ஒரே அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த தொடர் மூலம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 12 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

இந்தத் தொடரில் வெற்றிபெற்றதால் இந்திய அணிக்கு 120 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு அடுத்தப்படியாக, ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ளன.

மறுமுனையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் இன்னும் புள்ளிகளை பெறாமல் தரவரிசைப் பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் உள்ளன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்
அணிகள்

விளையாடிய போட்டிகள்

வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
இந்தியா 7 7 0 0 360
ஆஸ்திரேலியா 6 3 2 1 116
நியூசிலாந்து 2 1 1 0 60
இலங்கை 2 1 1 0 60
இங்கிலாந்து 5 2 2 1 56
பாகிஸ்தான் 1 0 1 0 0
வெஸ்ட் இண்டீஸ் 2 0 2 0 0
வங்கதேசம் 2 0 2 0 0
தென் ஆப்பிரிக்கா 2 0 2 0 2

இதையும் படிங்க:53 போட்டிகளில் 33 வெற்றி... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த கோலி

ABOUT THE AUTHOR

...view details