சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான, அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரிவாக்கம் செய்து இன்று வெளியிட்டுள்ளது. இதில், 10 அணிகள் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது முதன்முறையாக 80 அணிகளும் இடம்பெறும் வகையில் ஐசிசி இப்பட்டியலை தயார் செய்துள்ளது.
டி20 பட்டியல்- ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா! - பாகிஸ்தான்
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச அணிகளுக்கான டி20 பட்டியலில், இந்திய அணி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில், இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 260 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்று இடங்கள் சரிவடைந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் அணி 286 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி 262 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 261 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியும் 261 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், பிரேசில், உள்ளிட்ட ஐசிசி உறுப்பினர்கள் இல்லாத அணிகளும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.