இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2014இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றப் பின், கேப்டன் பொறுப்பை ஏற்ற கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி ஏராளமான தொடர்களை வென்றுவருகிறார். குறிப்பாக, சொந்த மண்ணில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாகத் திகழ்கிறது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றிபெறும் ஏழாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை கண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்களின் வரிசையில் ஆலன் பார்டரின் சாதனையை (32) முறியடித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். 53 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த கோலி, இதுவரை 33 போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளார். இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ், வெஸ்ட் இண்டீஸின் கிளைவ் லாயிட் ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள்
- கிரேம் ஸ்மித் - 53 வெற்றி (109 போட்டிகள்)
- ரிக்கி பாண்டிங் - 48 வெற்றி (77 போட்டிகள்)
- ஸ்டீவ் வாஹ் - 41 வெற்றி ( 57 போட்டிகள்)
- கிளைவ் லாயிட் - 36 வெற்றி ( 74 போட்டிகள்)
- தோனி - 33 வெற்றி (53 போட்டிகள்)
இதையும் படிங்க:முதல் இன்னிங்ஸில் டக்; 2-வது இன்னிங்ஸில் சதம்... டிராவிட்டின் 'பிங்க் நால்டால்ஜிக்' மொமண்ட்!