நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் கேப்டனாகச் செயல்படுகிறார்.
பின்னர் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - கே.எல். ராகுல் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ராகுல் - ரோஹித் இணை ஜோடி சேர்ந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியால், இந்திய அணி பவர் - ப்ளே ஓவர்கள் முடிவில் 53 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி இந்திய அணி ரன்கள் சேர்த்துவந்தது. ஒன்பது ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 10ஆவது ஓவரில் டாப் கியருக்கு மாறியது. அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்க 10 ஓவர் முடிவில் 84 ரன்களை எட்டியது.
பின்னர் அதிரடிக்கு மாறிய இந்தக் கூட்டணி நியூசி. பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுல் பென்னட் பந்தில் அடித்த ஷாட் எட்ஜாகி சாண்ட்னரிடம் கேட்சானது. இதனால் ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.