தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இந்திய தொடரானது ஆஷஸ்-க்கு நிகரானது' - நாதன் லயன் - பார்டர் கவாஸ்கர் கோப்பை

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்கு நிகரானது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

india-series-is-getting-up-as-exciting-as-ashes-lyon
india-series-is-getting-up-as-exciting-as-ashes-lyon

By

Published : Jun 24, 2020, 10:13 PM IST

இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஃபேஸ்புக் நேரலையில் உரையாடினார். அப்போது பேசிய அவர், "ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும்போது, நாங்கள் போட்டிகளை அல்லது தொடர்களை இழப்பது உங்களுக்கு நிச்சயமாக பிடிக்காது. வெளிப்படையாக சொல்லப்போனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எங்களை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அவர்கள் தற்போது இங்கே விளையாடவுள்ள தொடரில் நிச்சயம் இந்திய அணியை பழி தீர்ப்போம்.

மேலும், இத்தொடரானது புகழ்பெற்ற ஆஷஸ் தொடரைப் போன்றது. ஏனெனில், இந்திய அணியை பொறுத்தவரை பல நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. அதனால் அவர்களை இங்கு வீழ்த்தி தொடரை கைப்பற்றுவது சவாலானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இங்கிலாந்து கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை இல்லை - முன்னாள் வீராங்கனை

ABOUT THE AUTHOR

...view details