ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்டில் நடக்கிறது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரரான ரிஷப் பந்த், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.