தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்? - பிசிசிஐ

டெல்லி: எல்லைப் பகுதிகளில் சுமுகமான உறவு நீடித்துவரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா
இந்தியா

By

Published : Mar 25, 2021, 4:23 PM IST

எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அலுவவர் ஒருவர் கூறுகையில், "இந்தியாவுடன் தொடரில் விளையாடத் தயாராக இருக்கும்படி வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இந்தியா எந்த ஒரு உறுதிமொழியும் அளிக்கவில்லை.

தொடரில் விளையாடுவது குறித்து இந்தியாவிலிருந்து யாரும் நேரடியாக ஆலோசனையில் ஈடுபடவில்லை. ஆனால், தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம்" என்றார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, ஐசிசி தொடரை தவிர்த்து இருதரப்பு போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தது. கடைசியாக, கடந்த 2012-13ஆம் ஆண்டு, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான், ஒருநாள், டி20 தொடரில் விளையாடியது.

ABOUT THE AUTHOR

...view details