தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய மகளிர் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு! - மிதாலி ராஜ்

இந்திய மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்று (பிப்.27) அறிவிக்கப்பட்டது.

India name ODI and T20I squad for series against South Africa women
India name ODI and T20I squad for series against South Africa women

By

Published : Feb 27, 2021, 10:36 PM IST

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்கும் இப்போட்டிகள் அனைத்தும் லக்னோவிலுள்ள பாரத் ரத்னா அடால் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று (பிப்.27) அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ், டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் புதுமுக வீராங்கனைகளாக சி.பிரத்யுஷா, யஸ்திகா பாட்டியா, ஆயுஷி சோனி, ஸ்வேதா வர்மா, மோனிகா படேல், சிம்ரன் தில் பகதூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், புனம் ரவுத், பிரியா புனியா, யஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர், ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா, ஸ்வேதா வர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், பிரதியுஷா, மோனிகா படேல்.

இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஹார்லீன் தியோல், சுஷ்மா வர்மா, நுஜாத் பர்வீன், அருஷி சோனி, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பிரதியுஷா, சிம்ரன் தில் பகதூர்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் மீண்டும் மிரட்ட வரும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details