தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: தொடர் தடுமாற்றத்தில் இந்தியா! - அஜிங்கியா ரஹானே

அடிலெய்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி தடுமாறி வருகிறது.

India lose Pujara in post-Dinner session in Adelaide Test
India lose Pujara in post-Dinner session in Adelaide Test

By

Published : Dec 17, 2020, 2:56 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

தடுமாற்றத்தில் இந்தியா:

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா ரன் ஏதுமின்றியும், மயாங்க் அகர்வால் 14 ரன்களிலும் அடுத்தடுத்து போல்டாகி ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்திருந்தது.

நிதான ஆட்டத்தில் ரஹானே - கோலி:

இதையடுத்து தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நாதன் லயன் பந்துவீச்சில் லபுசாக்னேவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோலியுன் ஜோடி சேர்ந்து அஜிங்கியா ரஹானே விளையாடி வருகிறார். இதனால் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் விராட் கோலி 51 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:தந்தையான வில்லியம்சன் - வாழ்த்தும் பிரபலங்கள்!

ABOUT THE AUTHOR

...view details