சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் நடைபெற்றுவருகிறது. இன்று (மார்ச் 9) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி, கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்து. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இருப்பினும் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் கெவின் பீட்டர்சன் 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டர்களை விளாசி 75 ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசுப் பதான் 3 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சச்சின் டெண்டுல்கர் (9), முகமது கைஃப்(1), யுவராஜ் சிங் (22), பத்ரிநாத் (8), யூசுப் பதான் (17) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் பதான் - மன்பிரீத் கோனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இர்ஃபான் பதான் அரைசதம் அடித்து மிரட்டினார்.