இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் இந்தியா ஒன்றிலும், தென் ஆப்பிரிக்கா ஒன்றிலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 215, ரோஹித் சர்மா 176 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் கேசவ் மஹாராஜ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில் மிரட்டிய மயாங்க் - ரோஹித் இணை பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. எனினும் தொடக்க வீரர் டீன் எல்கர் 160, டிகாக் 111, கேப்டன் டூபிளஸ்ஸிஸ் 55 ஆகியோரின் பொறுப்பான ஆட்டாத்தால் அந்த எழுச்சி கண்டது. அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆடிய தென் ஆப்பிரிக்காவின் எல்கர், டூபிளஸ்ஸிஸ், டி காக் இதனால் 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தாலும், புஜாரா 81, ரோஹித் சர்மா 127 ரன்கள் என இந்திய அணிக்கு வலு சேர்த்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்க அடுத்தபடியாக களமிறங்கிய ஜடேஜா - கேப்டன் கோலி இணையும் அதிரடியாக விளையாடியது. ஜடேஜா விரைவாக 40 ரன்களை குவித்து வெளியேறினார். பின்னர் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. விராட் கோலி 31 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 27 ரன்களுடனும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.
பின்னர் 395 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் மூன்று ரன்கள் எடுத்தநிலையில், ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். பின்னர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மேற்கண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அந்த அணியின் தியூனிஸ் டி ப்ரூயூன் 10, அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமி இதைத் தொடர்ந்து இந்திய அணியின் ஷமி விக்கெட் வேட்டையை தொடங்கினார். அவர் பவுமா 0, கேப்டன் டூபிளஸ்ஸிஸ் 13, டிகாக் 0 என அனைவரையும் போல்டாக்கி மிரட்டினார். விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சற்று நிதானாக விளையாடிக்கொண்டிருந்த மார்க்ரம்.
அப்போது 26ஆவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்த மார்க்ரம் 39 ரன்களில் வெளியேறினார். அதே ஓவரில் 4, 5ஆவது பந்தில் பிலாண்டர் 0, மஹாராஜ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, நூலிழையில் ஹாட்ரிக்கை தவறவிட்டார். தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழலில் ஜோடி சேர்ந்த தமிழ்நாட்டைப் பூர்விகமாக கொண்ட ஆல்-ரவுண்டர் சீனுராம் முத்துசாமி - டேன் பீட்டெட் ஆகியோர் அணியை தோல்வியை தவிர்ப்பதற்காகப் போராடினர். அவர்கள் இருவரும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர்.
எனினும் உணவு இடைவேளைக்குப்பின் அந்த கூட்டணியை மீண்டும் ஷமி தனது துல்லியமான பந்துவீச்சால் சிதறடித்தார். ஷமியின் பந்துவீச்சில் போல்டான டேன் பீட்டெட் 56 ரன்களில் வெளியேறினார். ஏறக்குறைய தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி உறுதியானபோதும் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா இறுதிக்கட்டத்தில் 18 ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் சீனுராம் 49 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்தியா தரப்பில் ஷமி 5, ஜடேஜா 4, அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா இதனால் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரோஹித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.