இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 69.7 புள்ளிகளைப் பெற்று மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்து அணி 67 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.