வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி நான்குப் போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கயானாவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதமடித்து இந்திய அணியை வலுப்பெறச் செய்தனர்.