தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘ஆஸ்திரேலிய தொடரைக் கைப்பற்ற இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது’ - விவிஎஸ் லக்ஷ்மன்! - விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று வடிவிலான தொடரையும் இந்திய அணி கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

India has very good chance to beat Australia in all formats: VVS Laxman
India has very good chance to beat Australia in all formats: VVS Laxman

By

Published : Nov 22, 2020, 6:40 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தொடர் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், ஆஸ்திரேலியா அணிகெதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த லக்ஷ்மணின் பேட்டி இதோ...,

கேள்வி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரை நீங்கள் எப்படி பார்கிறீர்கள். அதாவது தற்போது தான் இருநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு அரபு அமீரகத்திலிருந்து திரும்பியுள்ளனர். இதனால் அவர்கள் சோர்வாக இருப்பார்களா?

பதில்: என்னை பொறுத்த வரையிலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நினைக்கிறேன். ஏனெனில் இத்தொடரானது முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைக் கொண்டு தொடங்குகிறது. அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

அதேசமயம் ஐபிஎல் போட்டிகளும் தற்போது சர்வதேச அளவிற்கு வளர்ந்துள்ளது. அதனால் வீரர்களின் இப்பயணமானது அவர்களுக்கு எளிதாகவே அமையும். இருப்பினும் பணிச்சுமை என்பது வீரர்களுக்கு சவாலான ஒன்று தான். ஆனாலும் அவர்களுக்கு 16 நாட்கள் ஒய்வு கிடைத்துள்ளதால், அது பெரிய விஷயமாக தெரியாது.

கேள்வி: சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறும்போது, 53 நாள் ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகும் வீரர்கள் சோர்வடைய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அனைத்து வீரர்களும், இவ்விளையாட்டின் சிறந்தவர்கள். அவர்கள் தங்களது உடற்தகுதி குறித்து நிறைய உழைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு மாத காலம் ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தாலும், வீரர்களுக்கான போதுமான ஓய்வும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றதால் வீரர்களின் பயணச்சுமை குறைந்துள்ளது. இதுவே நீங்கள் இந்தியாவில் ஐபிஎல் விளையாடியுள்ளீர்கள் என்றால், விமான பயணத்தின் போது செக்-இன், செக்-அவுட்கள் மற்றும் பொருட்களின் காரணமாக வீரர்கள் அதிக சோர்வாக இருந்திருப்பார்கள். எனவே, அவர்கள் சோர்வாகவோ அல்லது கஷ்டமாகவோ இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: ஆஸ்திரேலியா - இந்தியா பயணத்திட்டம் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைவதாக சொன்னீர்கள். ஏனெனில் முதலில் ஒருநாள், பின்னர் டி 20 மற்றும் கடைசியாக டெஸ்ட் தொடர் அமைந்துள்ளதால் அப்படி கூறியுள்ளீர்கள். உங்கள் அனுபவத்திலிருந்து, குறுகிய வடிவத்தில் விளையாடிய வீரர்கள் முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று, பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமா?

பதில்: இல்லை. இது வேறு வழி. நான் விளையாடும் காலங்களில் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது குறுகிய கால விளையாட்டுகளை விளையாடவே முதலில் விருப்பப்படுவோம். ஏனெனில் நீங்கள் முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் போது, அந்நாட்டின் வானிலை மற்றும் சூழலுக்கு உங்களை தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். அது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அது சவாலாக தெரியாது. ஆனால் மாறாக முதலில் டெஸ்ட் தொடரை விளையாடினால், அது கண்டிப்பாக வீரர்களுக்கு கடும் சவால்களை தரும். ஏனெனில் மைதானம், ஆட்டத்தின் போக்கு, சூழல், வானிலை போன்ற பல்வேறு காரணங்கள் கடும் சவாலாக அமையும். அந்த நிலமைகளுடன் பழகுவது எப்போதும் கடினம்.

கேள்வி: நீங்கள் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், தற்போதைய வீரர்களும் அவ்வாறே உணர்வார்கள் என்று நினைக்கிறீர்களா. அதாவது முதலில் குறுகிய வடிவ கிரிக்கெட், பின்னர் டெஸ்ட் தொடர்?

பதில்: நிச்சயமாக இத்தலைமுறையினரும் இதனையே பின்பற்றுவர் என்று நம்புகிறேன். ஏனேனில் தற்போதுள்ள டி20 கிரிக்கெட் காலத்தில் வீரர்கள் அனைவரும் முதலில் குறுகிய கால போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பின்னர் அதே நம்பிக்கையோடு அவர்கள் டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்ள தயாராவார்கள்.

கேள்வி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு உங்களு மகிழ்ச்சியளிக்கிறதா?

பதில்: நிச்சயமாக. இதுபோன்ற ஒரு வலிமையான அணியை நாம் மூன்று வடிவங்களிலும் கொண்டிருப்பது மிகவும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். ஏனெனில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சமநிலையான அணியை தேர்வு செய்வது இன்றியமையாத ஒன்று.

கேள்வி: விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து உங்களது பார்வை?

பதில்: விராட் கோலி ஒரு மிகச்சிறந்த கேப்டன். அவர் இத்தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளை இழந்துள்ளார். இருந்தாலும் என்னைப்பொறுத்த வரை அது இளைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன். அவரது விடுப்பு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், அது பிற வீரர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் மாற்று வீரராய யார் தேர்வு செய்யப்படுவார். அதுகுறித்த உங்களது தேர்வு?

பதில்: அணியில் திறமையான வீரர்கள் நிறையபேர் உள்ளனர். மேலும் அப்போட்டிகள் அனைத்து டிசம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதனால் அணியின் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு வீரர்களைத் தேர்வு செய்ய போதிய நேரம் உள்ளது. அதேசமயம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

என்னைப்பொறுத்த வரை அந்த வாய்ப்பு ஹனுமா விஹாரி அல்லது அறிமுக வீரர் சுப்மன் கில்லிற்கு கிடைக்கும் என நம்புகிறேன். ஏனெனில் ஹனுமா விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் சுப்மன் கில் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகவே இவர்களை இருவரையும் தேர்வு செய்துள்ளேன்.

கேள்வி: டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதை பார்க்க விரும்புகிறீர்களா?

பதில்: அது முற்றிலும் மைதானத்தின் தன்மையைப் பொறுத்தே அமையும். மேலும் இந்திய அணியிடன் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதே மதிப்பிற்கு வேகப்பந்துவீச்சாளர்களும் கிடைத்துள்ளனர். எனவே மைதானத்தின் தன்மைக்கேற்ப அணி நிர்வாகம் சரியான ஒரு கலவையை தேர்ந்தெடுக்கும்.

கேள்வி: சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு எதேனும் ஒரு குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பளிக்கபடுமா?

பதில்: அணியின் தேர்வு குறித்து பேசுவது மிகவும் கடினமான ஒன்று.ஆனால் அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர், அவர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: ஆஸ்திரேலியாவில் நீங்கள் விளையாடி ஒட்டுமொத்த அனுபவம்?

பதில்: டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான சிறந்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று நான் எப்போதும் உணர்கிறேன்.ஒரு முறை நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அந்த சூழலிற்கு பழகிவிட்டால், உங்கள் ஆட்டம் சிறப்பானதாக அமையும்.

கேள்வி: விராட் கோலியின் விடுப்பு குறித்த உங்களது பார்வை?

பதில்: என் மகளின் பிரசவத்திற்காக என் மனைவியுடன் இருக்க இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகளை நான் தவிர்த்துள்ளேன். ஏனெனில் நீங்கள் உங்களது முதல் குழந்தையைப் பெறப்போகிறீர்கள் எனும் போது அது ஒரு முக்கியமான உணர்வாகும். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நீங்கள் மதிப்பளிக்கவேண்டும். அதுபோல தான் விராட் கோலியின் இந்த விடுப்பானது, அவரது மனைவியின் மீதுள்ள மதிப்பினால் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரின் அனுபவம் இந்தியாவுக்கு எதிராக எனக்கு உதவும்’ - ஆஷ்டன் அகர்!

ABOUT THE AUTHOR

...view details