ஐசிசியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில், 13ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை, அனைத்து இந்திய ஜூனியர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரயம் கார்க் இந்திய அணியின் கேப்டனாக நியக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், நடப்பு சாம்பியன் இந்திய அணி ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு குரூப் பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லெக் சுற்றுக்கு முன்னேறும்.
- குரூப் ஏ: இந்கியா, ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை
- குரூப் பி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, வெஸ்ட் இண்டீஸ்
- குரூப் சி: வங்கதேசம், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே
- குரூப் டி: ஆப்கானிஸ்தான், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்