இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பைகான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா சி அணி, இந்திய ஏ அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களான மயங்க் அகர்வால், கேப்டப் சுப்மன் கில் அதிரடியாக ஆடத்தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதன் பின் 120 ரன்களில் மயங்க் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் சுப்மன் கில் 123 பந்துகளில் சதமடித்து ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் 143 ரன்கள் அடித்து அஸ்வின் பந்துவீச்சில் ஆடமிழந்தார். அதன் பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தார். அதிரடியாக விளையாடிய யாதவ் 24 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.