இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கவுள்ளது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் ஆம்ரிஸுக்குப் பதிலாக எவின் லூயிஸ் களமிறங்குகிறார். மேலும் ஹெய்டன் வால்ஷுக்குப் பதிலாக கேரி பியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.