மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி போட்டிகள் விளையாடிவருகின்றன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெறவிருந்த இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில், இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஏழாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.